முகப்பு Uncategorized அடிமாடுகள் கடத்தும் தோரணையில் போதை பொருள் கடத்தல்.

அடிமாடுகள் கடத்தும் தோரணையில் போதை பொருள் கடத்தல்.

2
0

ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோத இறைச்சி விற்பனைக்காக 20 மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியில், 42 கிலோ கஞ்சா 4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே போலீசார் சோதனையிட்டு லாரியை பறிமுதல் செய்தனர்.

கஞ்சாவை கடத்திச் சென்ற தேனி மாவட்டம், உத்தபாளையத்தைச் சேர்ந்த கவுதம்(27), ராம்குமார்(29), கரன்குமார்(23) ஆகிய 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இறைச்சி விற்பனைக்காக மாடுகளை கடத்துவது போன்ற தோரணையில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தும் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்