கரூரில் 3 வயது சிறுமி மாதங்கி ஸ்ரீ, ஸ்கேட்டிங்கில் உலக சாதனை- ஏற்கனவே 1 மணி நேரம் உலக சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது 5 மணி நேரம் இடைவிடாமல் உலக சாதனை படைத்தார். நோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கினர்.

கரூரை சேர்ந்த கருப்பையா மற்றும் லதா தம்பதியினரின் மகள் மாதங்கி ஸ்ரீ. 3 வயதிலேயே ஸ்கேட்டிங்கில் திறன் பெற்று விளங்கியதால் இதில் உலக சாதனை நிகழ்த்த பெற்றோர்கள் விரும்பினர். இதனை அடுத்து கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விளையாட்டு மைதானத்தில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு 1 மணி நேரம் முழுவதும் இடைவிடாமல் ஸ்கேட்டிங் செய்த முதல் 3 வயது சிறுமி என உலக சாதனை படைத்திருந்தார்.

இந்த உலக சாதனையில் மொத்தம் 90 சுற்றுகளின் மூலம் 6.5 கிலோ மீட்டர் இடைவிடாமல் ஸ்கேட்டிங் செய்து இச் சிறுமி சாதனை படைத்திருந்தார்.
இந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு தொடர்ந்து ஐந்து மணி நேரம் ஸ்கேட்டிங்கில் உலக சாதனை புரியும் இலக்கை நிர்ணயித்து தொடங்கினார் இரவு 9 மணி வரை இடைவிடாமல் தொடர்ந்து ஐந்து மணி நேரத்தில் 365 சுற்றுகள், 26.5 கி.மீ தூரத்தை கடந்து, உலக சாதனை புரிந்து 3 வயது சிறுமி மாதங்கிஸ்ரீ க்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுக்களை தெரிவித்தார்.