விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முதற்கட்டமாக தமிழகத்தில் 14 இடங்களில் ‘தளபதி விஜய் பயிலகம்’ தொடங்கப்பட்டது. இதில் 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரவு நேர பாடசாலை திறக்கப்பட்டு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாடம் கற்பித்து வருகின்றனர். உடன் அரவக்குறிச்சி ஒன்றிய விஜய் மக்கள் இயக்க தலைவர் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் முதல் பயிலரங்கமாக அரவக்குறிச்சியில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் பாடசாலை திறப்பு விழா நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் மதியழகன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் பயிலரங்கத்திற்கு இன்று ஒரே நாளிலே ஆர்வத்துடன் வருகை தந்த 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்புக், பேனா, பென்சில், வாய்ப்பாடு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.