முகப்பு Uncategorized அரியலூர் – சாலை அமைக்கும் பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

அரியலூர் – சாலை அமைக்கும் பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

4
0

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் நகர சாலையுடன் கிராம சாலைகளை இணைக்கும் வகையில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைகள் அமைக்கும் பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

இதன் கீழ், இலங்கைச்சேரி கிராம சாலை, வீராக்கள் முதல் பொன்பரப்பி சாலை கழுமங்கலம் சாலை என 3 கோடியே 79 லட்சம் மதிப்பிலான சாலை அமைக்கப்பட உள்ளது.

இதன், மூலம் அந்தந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராம மக்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதோடு விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விரைவில் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பு இதனால் ஏற்படும்.

இதனையடுத்து, கீழமாளிகை கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் போக்குவரத்து துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்