கரூர், நகரப் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ரகுமாய் தாயார், ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் ஆனி மாத ஆஸ்திர ஏகாதேசியை முன்னிட்டு காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர், பக்தர்கள் கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு தரிசிக்க அனுமதி வழங்கினார். அதன், தொடர்ச்சியாக காலை முதல் இரவு வரை பக்தர்கள் சுவாமி தொட்டு தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், சுவாமியின் திருவீதி உலா ஆலயத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதியில் வழியாக வலம் வந்தது.

ஆலயத்தில், இருந்து புறப்பட்ட ரகுமாய் தாயார் மற்றும் பண்டரிநாதன் சுவாமிக்கு ஏராளமான பொதுமக்கள் தேங்காய், பழம் பிரசாதம் வைத்து வழிபட்டு தங்களது நேர்த்திக் கடனை செய்தனர்.

அருள்மிகு, ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் நடைபெற்ற 100 ஆம் ஆண்டு ஆசாட ஏகாதேசி விழா ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்து வந்தனர்.