முகப்பு Uncategorized ஆடி அமாவாசை யாத்திரை சிறப்பு ரயில்.

ஆடி அமாவாசை யாத்திரை சிறப்பு ரயில்.

9
0

இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் ‘ஆடி அமாவாசை யாத்திரை’ என்ற பெயரில் பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் வருகிற ஆகஸ்ட் மாதம் இயக்கப்படுவதாக அதன் பொது மேலாளர் ராஜலிங்கம் மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஆடி அமாவாசை யாத்திரை என்ற பெயரில் தனது சுற்றுப் பயணத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் 7ந் தேதி திருநெல்வேலியில் துவக்குகிறது.

11 நாட்கள் / 12 இரவுகள் தனது பயணத்தை மேற்கொள்ளும் பாரத் கெளரவ் ரயிலில் ஓம்காரேஸ்வரர், மஹாகாலேஸ்வர் (ஜோதிர்லிங்கம்), ஹரித்வார், ரிஷிகேஷ், திருவேணி சங்கமம் (அலகாபாத்), வாரணாசி (காசி) மற்றும் கயா உள்ளிட்ட சுற்றுலா தளங்களைப் பார்வையிடலாம்.

சிறப்பு சுற்றுலா ரயில் திருநெல்வேலியில் துவங்கி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் நின்று யாத்ரீகர்களை ஏற்றிச் செல்லும்.

இதற்கு மூன்றாம் வகுப்பு AC பெட்டியில் பயணம் செய்ய நபர் ஒருவர்க்கு ரூ. 39,100 /- என்றும், இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் ரூ. 21,800 / – என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்