ஆடி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்நிலையில் இன்று மாலை வாராகி அம்மனுக்கு ஒரு லட்சம் வளையலால் அலங்காரம் செய்யப்பட உள்ளது என தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்துள்ளனர்.