முகப்பு Uncategorized ஆனி மாத கிருத்திகை – வண்ண மலர்களால் ஜொலித்த பாலமுருகன்.

ஆனி மாத கிருத்திகை – வண்ண மலர்களால் ஜொலித்த பாலமுருகன்.

3
0

அண்ணா சாலை கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேர், நெய் இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து, பாலமுருகனுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி பண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

அதைத் தொடர்ந்து தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு கற்பக விநாயகர் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் பாலமுருகனை வழிபட்டு சென்றனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்