கரூர் மாவட்டம், சுதந்திர அமைப்பு ஓட்டத்தினை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து மாவட்ட விளையாட்டு மைதானம் வரை செல்லும் மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்.
AZADI KA AMRUT MAHOTSAV-பங்கேற்புடன் 75 ஆண்டுகள் சுதந்திர தின விழாவினை சிறப்பிக்கும் வகையில், இந்திய சுதந்திரம் மற்றும் சுதந்திர அமைப்பு ஓட்டம் அனைத்து பங்கேற்பாளர்களும் பங்குபெற்று இன்று கரூர் மாவட்ட ஆட்சியகம் முன்பாக துவங்கி 3 கிலோ மீட்டர் தூரம் அரசினர் கலைக்கல்லூரி தான்தோன்றிமலை, பாரதிதாசன் 4வது கிராஸ் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை நடைபெற்றது.
இதன் மூலம் அனைத்து மக்களும் தினமும் 30 நிமிட உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்கிட தங்கள் வாழ்வில் தீர்மானம் மேற்கொள்ளலாம். மேலும், சமூக இடைவெளியினை பின்பற்றும் போதும் உடற்தகுதியின் அவசியத்தேவையினை உணர்ந்து நம் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க இயலும். சோம்பல், மனஅழுத்தம், கவலை, நோய்கள் முதலியவற்றிலிருந்து விடுபடுவதற்கும் உடல்தகுதியினை மேம்படுத்தவும், உடற்பயிற்சியினை பிரபலபடுத்தவும் ஆரோக்கியமான மற்றும் பொருத்தமான வாழ்க்கைமுறையினை பின்பற்ற இயலும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தெரிவித்தார்கள்.