முகப்பு Uncategorized இந்தியாவிலேயே முதல் முறையாக பாம்புக்கடிக்கென காப்பீட்டுத் திட்டம்.

இந்தியாவிலேயே முதல் முறையாக பாம்புக்கடிக்கென காப்பீட்டுத் திட்டம்.

1
0

இங்கிலாந்து நாட்டில் உள்ள ரெடிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பாம்புக்கடி ஆராய்ச்சியாளருமான கோவையை சேர்ந்த சக்திவேல் வையாபுரி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி மற்றும் வீடுகளில் பாம்புகள் வராமல் தடுக்க கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர் – ஆண்டுதோறும் பாம்புக்கடியால் இந்தியா முழுவதும் சுமார் 58 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.

எங்கள் ஆராய்ச்சி மூலம் தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர வரையிலும் மரணிக்க வாய்ப்புள்ளதாகக் கண்டறிந்துள்ளதாக கூறிய அவர், கிராம பகுதிகளில் பாம்பு கடியால் செய்யக்கூடிய சிகிச்சை செலவுகளால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமே கேள்வி குறியாகி விடுவதாக குறிப்பிட்டார்.

எனவே, இந்தியாவிலேயே முதல் முறையாக பாம்புக்கடிக்கென காப்பீட்டுத் திட்டம் மிகக்குறைந்த விலையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறிய அவர், இத்திட்டத்தில் ஆண்டுக்கு வெறும் ரூ. 472 என்ற பிரீமியத்தில் மக்கள் ஒரு லட்சத்திற்கான பாம்புக்கடிக்கான சிகிச்சை மற்றும் உயிரிழப்பு மற்றும் உடல் உறுப்பு இழப்புக்கான காப்பீட்டைப் பெற முடியும் என தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்