நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் பிரான்க் ஹூகர்பீட்ஸ். புவியியல் ஆய்வு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவர் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று தனது டுவிட்டர் பக்கத்தில், “மத்திய – தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கூடிய விரைவில் அல்லது தாமதமாக பதிவாகும்” என்று கூறி இருந்தார். அப்போது அதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில், தற்போது அவரின் இந்த பதிவு வைரலாகியுள்ளது.
இதற்கிடையே அவர் இந்தியா பாகிஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரான்க் ஹூகர்பீட்ஸ் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
(புதுடெல்லி)
இதே ஆய்வாளர் நில அதிர்வுவுகள் இறுதியில் பாகிஸ்தானையும் இந்தியாவையும் கடந்து இந்தியப் பெருங்கடலில் முடிவடையும் என கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் அவர் ஆப்கானிஸ்தானில் தொடங்கும் ஒரு பெரிய நிலநடுக்கம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நில அதிர்வு இறுதியில் பாகிஸ்தான், இந்தியாவைக் கடந்து இந்தியப் பெருங்கடலில் முடிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.