முகப்பு Uncategorized இளைஞர் திறன் திருவிழா

இளைஞர் திறன் திருவிழா

2
0

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஊரக இளைஞர்களுக்கு தீனதையாள் உபாத்தியாய கிராமின் கௌசல்யயோஜனா மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி ஊரகப் பகுதிகளில் சுய வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி மற்றும் இதர பயிற்சிகள் மூலம் ஊரக இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கும் அரசு துறைகளையும், தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைந்து அனைத்து வட்டாரங்களிலும் “இளைஞர் திறன் திருவிழாக்கள்” நடத்தப்பட உள்ளது. இளைஞர்கள் அதிக வேலை வாய்ப்புள்ள தொழில்களைப் பற்றி அறிந்து கொள்வதோடு, திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் தகவல்களையும் ஒருங்கே பெறுவதற்கும், திறன் பயிற்சி பெறுவதற்கும் இந்த இளைஞர் திறன் திருவிழாக்கள் பேருதவியாக அமையும் என தெரிவித்துள்ளார்.

அதன்படி கரூர் மாவட்டத்தில் 14.10.2022 அன்று அரசு கலைக்கல்லூரி, தான்தோன்றி மலையில் காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் கரூர் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் சென்னை, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் செயல்படும் திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன. எனவே ஆர்வம் உள்ள இளைஞர்களும், பெண்களும் தங்களின் கல்வி தகுதிக்குரிய ஆவணங்களுடன் இந்த இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதில் தெரிவு செய்யப்படுவோருக்கு அவரவர் கல்வி மற்றும் திறனுக்கு ஏற்ப வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்