ஈரோடு, கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற கமலவல்லி தாயார் சமேத கஸ்தூரி அரங்கநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சுதர்சன யாகம் விக்னேஸ்வர பூஜை துவங்குகிறது.

தொடர்ந்து, காயத்ரி மந்திரம், மாலாமந்திர ஜபமும், மாலை 5 மணிக்கு வேத பாராயணமும் நடக்கிறது, 27ம் தேதி காலை 6 மணிக்கு சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி, 8.30 மணிக்கு சுதர்சன யாகம், மாலை 5 மணிக்கு சதுர்வேத பாராயணமும் நடக்கிறது.

வரும், 28ம் தேதி காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், திருப்பல்லாண்டு, வேத பாராயணம், காலை 7 மணிக்கு சுதர்சன யாகம் பூர்த்தி, காலை 10 மணிக்கு கலச புறப்பாடு, காலை 11 மணிக்கு சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு தேவி, பூதேவியுடன் கஸ்தூரி அரங்கநாதர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஹோமம் நடக்கும் நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது என கோயில் செயல் அலுவலர் கயல்விழி தெரிவித்துள்ளார்.