முகப்பு Uncategorized உலகத்திற்கு முருங்கை வழங்கும் மையம் கரூரா!!

உலகத்திற்கு முருங்கை வழங்கும் மையம் கரூரா!!

1
0

சர்வதேச கண்காட்சியின் மூலம் உலகத்திற்கு முருங்கை வழங்கும் மையமாக கரூர் உருவாக வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்.

கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது, கரூர் மாவட்டத்தில் ஜவுளி ஏற்றுமதி, கொசுவலை, பேருந்து கூண்டு கட்டும் தொழில், உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் சிறப்பு பெற்று உலக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள முருங்கையை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் வருகின்ற நவம்பர் மாதம் 4, 5, 6 தேதிகளில் சர்வதேச முருங்கை கண்காட்சி நடைபெற உள்ளது.தமிழக முதல்வர் கரூர் மாவட்டத்தை முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அறிவித்துள்ளது. இது பெருமைப்படக்கூடிய விஷயமாகும். முருங்கைக்காய் ஒரு மிகப்பெரிய பச்சை தங்கம் ஆகும். இதை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி அவர்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 20 ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது இந்த தொழில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சர்வதேச கண்காட்சியை பெரும் திருவிழாவாக மாற்றி உலகத்திற்கு முருங்கை வழங்கும் மையமாக கரூர் மாவட்டம் உருவாக வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்