முகப்பு Uncategorized உழவர் சந்தை ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி உற்சவ விழாவின் முதல் நாள்...

உழவர் சந்தை ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி உற்சவ விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி.

1
0

கரூர் மாவட்டம், உழவர் சந்தை பிரம்ம தீர்த்தம் சாலையில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், குங்குமம், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்தனர். தொடர்ந்து அனைவருக்கும் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்