கரூர் அருகே கேஸ்சிலிண்டர் வெடித்து கூலித்தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். அவரது நண்பர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
கரூர் மாவட்டம் அணைப்பாளைத்தைச் சேர்ந்தவர் தவசிமணி(வயது 41). இவரது நண்பர் புரவிபாளையத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். சம்பவத்தன்று இரவு ஜெயராஜின் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரில் கேஸ் லீக்கேஜ் ஆனதாம். தவசிமணி அதைப் பரிசோதிக்க அங்கு சென்றாராம். நண்பர்கள் இருவரும் செல்போன் லைட் ஸ்விட்சை ஆன் செய்தார்களாம். அப்போது எதிர்பாராதவிதமாக கேஸ் சிலிண்டர் வெடித்தது. இருவரும் தூக்கிவீசப்பட்டனர்.

பலத்த தீக்காயங்களுடன் ஜெயராஜும் தவசிமணியும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தவசிமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி அவரது மனைவி அன்னபூரணி சின்னதாராபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குபதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார். ஜெயராஜ் சிகிச்சை பெற்று வருகிறார்.