பாலம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய கரூர் மாவட்ட கலெக்டர் ஒன்றிய அரசு விருது உள்துறை அமைச்சர் அமித்ஷா வழங்கி கௌரவிப்பு. கரூர் மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு பிரிவின் கீழ் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பாலம் திட்டத்திற்காக கரூர் மாவட்ட கலெக்டருக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் எக்சலன்ஸ் இன் கவர்மெண்ட் விருது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வழங்கி கௌரவித்துள்ளார். கரூர் கலெக்டர் கூறியதாவது, ஒரு வெற்றிகரமான திட்டமாக பாலம் திட்டம் கரூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் செயல்படுத்துவதற்கு காரணமான அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக கருர் கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.