முகப்பு ஆன்மீகம் கரூரில் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி உற்சவர் திருவீதி உலா.

கரூரில் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி உற்சவர் திருவீதி உலா.

14
0

மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதிசையை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று அபய பிரதான ரங்கநாத சுவாமி உற்சவருக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அதை தொடர்ந்து வண்ண மாலையில் அணிவித்த பிறகு ஆலய மண்டபத்திலிருந்து புறப்பட்ட அபய பிரதான ரங்கநாத ஸ்வாமி ஆலயம் உள்பிரகாரம் வழியாக திருவீதி உலா காட்சியளித்தார். மேல தாளங்கள் முழங்க நடைபெற்ற சுவாமியின் பகல் பத்து ஐந்தாம் நாள் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து மீண்டும் ஆலயம் மண்டபம் வந்தடைந்த சுவாமிக்கு ஆலயத்தின் பட்டாச்சாரியார் மகா தீபாரதனை காட்டினார். அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்