முகப்பு Uncategorized கரூரில் இன்ஸ்பெக்டர்கள் இல்லாத காரணத்தால் குஷியில் திருடர்கள்.

கரூரில் இன்ஸ்பெக்டர்கள் இல்லாத காரணத்தால் குஷியில் திருடர்கள்.

11
0

கரூர் டவுன் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் மற்றும் வெங்கமேடு போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் கடந்த, ஒரு மாதத்துக்கும் மேலாக காலியாக உள்ளது. இதனால், புகார்தாரர்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.

கரூர் டவுன் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன், இன்ஸ்பெக்டராக இருந்த கார்த்திகேயன், திருச்சிக்கு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதை தொடர்ந்து, புதிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படவில்லை.

ஒரு மாதமாக இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ள நிலையில், கரூர் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல், வெங்கமேடு போலீஸ் ஸ்டேஷன் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்த நெப்போலியனும், புகாரின் அடிப் படையில் தென் மண்டலத்துக்கு மாற்றப்பட்டார்.

அந்த பணியிடத்துக்கும் இதுவரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படவில்லை. இதனால் வெங்கமேடு, வாங்கல் போலீஸ்ஸ்டேஷனில் நாள்தோறும், புகார்தாரர்கள் பொறுப்பு இன்ஸ்பெக்டர் வருகைக்காக காத்திருக்கின்றனர்.

இதனால், புகார்தாரர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர் டவுன் போக்கு வரத்து போலீஸ் ஸ்டேஷன், வெங்கமேடு சர்க்கிள் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு, உடனடியாக இன்ஸ்பெக்டர்களை நியமிக்க திருச்சி மண்டல ஐ.ஜி,பாலகி ருஷ்ணன், திருச்சி சரக டி.ஐ. ஜி., சரவணசுந்தர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்