முகப்பு ஆன்மீகம் கரூரில் இப்படி ஒரு கோவிலா?

கரூரில் இப்படி ஒரு கோவிலா?

4
0

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் சின்ன தாதம்பாளையம் பகுதியில் 1000 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த சிவலிங்கம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பூமியில் விவசாய நிலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டு அதன் அருகே சிவலிங்கம் மற்றும் நந்தி சிலை நிறுவப்பட்டு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தை மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு 1000 ஆண்டு பழமை வாய்ந்த சிவலிங்கம் மற்றும் நந்தி பகவானுக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், அபிஷேக பெடி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அக்கோவில் தற்போது “அண்ணாமலையார் கோவில்” என சூட்டப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்