முகப்பு Uncategorized கரூரில், உடலுக்கு தீங்கு இல்லாத செக்குகளில் ஆட்டி எடுக்கப்படும் எண்ணெய் விற்பனை அமோகம்.

கரூரில், உடலுக்கு தீங்கு இல்லாத செக்குகளில் ஆட்டி எடுக்கப்படும் எண்ணெய் விற்பனை அமோகம்.

1
0

தீபாவளி பண்டிகைக்கு செக்கு எண்ணெய் வாங்க மக்கள் ஆர்வம்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பலகாரம் தயாரிப்பு உள்ளிட்ட பயன்பாட்டுக்கு, செக்கு எண்ணெய் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்றைய காலத்தில் உணவு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. நம் வாழ்வில் முடிவு செய்வதில் முக்கிய பங்கு, உணவு பொருள்களுக்கும் உண்டு. பலரும் உடலுக்கு தீங்கு இல்லாத சமையல் எண்ணெயை பயன்படுத்துவதை விரும்புவர். இதனால்,  செக்குகளில் ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மக்கள் அதிக அளவில் வாங்குகின்றனர். கரூர் மாவட்டத்தில், பல்வேறு செக்கு எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

செக்கு எண்ணெய் பலகாரத்திற்கு மட்டும் பயன்படாமல், கோவில்களுக்கும் பயன்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எண்ணை தேய்த்து குளிப்பது வழக்கமாக உள்ளது. அதற்காகவும் எண்ணெயை சிலர் வாங்கி செல்கின்றனர். முன்னதொரு காலங்களில் செக்கு எண்ணெய் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அது முற்றிலும் மாறி, கலப்படமான எண்ணையை வாங்கி பொதுமக்கள் உபயோகிக்க தொடங்கினர். பின்னர், திரும்பவும் செக்கு எண்ணைக்கு மாறி விட்டனர். அதுவும் எண்ணை தயாரிக்கும் இடத்திற்கே சென்று, எண்ணெயை ஆட்டி வாங்கி செல்கின்றனர். சில பொதுமக்கள் பாட்டில்களில் வரப்படும் தேங்காய் எண்ணெயை வாங்காமல், தாங்களாகவே தேங்காவை உடைத்து எடுத்துக் கொண்டு வந்து, செக்கில் எண்ணெயை ஆட்டி எடுத்துக்கொண்டு செல்கின்றனர். இதனால், செக்கு எண்ணெய் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. செக்கு எண்ணெய் வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டங்களில், கடலை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் அவற்றை வாங்கி எண்ணெய் ஆட்டுகின்றனர். இந்நிலையில் எள், கடலை விலை உயர்வால் எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. இதுகுறித்து, கரூர் அமராவதி வியாபாரிகள் நல சங்க துணை தலைவர் சேனாதிபதி கூறியதாவது, இயந்திரம் மூலம் தயாரிக்கப்படும் எண்ணெய் பதப்படுத்துவதற்கு, வேதியியல் பொருட்கள் கலக்கப்படும். எண்ணெய் ஆகியவை பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனை மக்கள் உணர தொடங்கியுள்ளனர். தற்போது மரச்செக்கு எண்ணெய் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும், செக்கு எண்ணெய் என்ற பெயரில் கலப்படமான எண்ணையும் விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளி பண்டிகை ஒட்டி பலகாரம் சுடுவதற்காக, செக்கு எண்ணெயை இல்லத்தரசிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இப்போது கலப்படமான எண்ணெய்கள் அதிகமாக வருவதால், செக்கு எண்ணெய் சிறந்ததாக கருதி பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். பண்டிகை காலமாக இருப்பதால் கடைகளில் விலை உயர்வாக எண்ணை விற்பதால் இல்லத்தரசிகள் நேரடியாக என்னை தயாரிக்கும் செக்கு எண்ணெய் ஆட்டும் இடத்திற்கு வந்து எண்ணையை வாங்கி செல்கின்றனர்.

இவை குறைந்த விலையில் கிடைக்கிறது என மக்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். தற்போது அறுவடை சீசன் இல்லாததால் கடலையின் விலை கிலோ 95 ரூபாய், எள்ளின் விலை 145 உயர்ந்துள்ளது. இதனால்,   கடலை எண்ணெய் லிட்டர் 230 முதல் 260 ரூபாய், நல்லெண்ணெ லிட்டர் 330 ரூபாய் முதல் 380 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. ரஷ்யா உக்கரின் போர் காரணமாக, பாமாயில் விலை உயர்ந்து உள்ளது. தற்போது இறக்குமதியில் சிக்கல் தீர்ந்ததால் பாமாயில் விலை குறைந்துள்ளது. இந்த தாக்கத்தால் மற்ற எண்ணெய் விலையும் கட்டுக்குள் வந்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்