முகப்பு Uncategorized கரூரில் காவிரி ஆற்றில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

கரூரில் காவிரி ஆற்றில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

14
0

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில், கல்பாசு மற்றும் கெண்டை மீன், விரலி மீன், சேல் கெண்டை, மிர்கால், ரோகு குஞ்சுகள் ஆகியவை காவிரி ஆற்றில் விடப்பட்டன.

இதுகுறித்து ஆட்சியர் பிரபு சங்கர் கூறுகையில், காவிரியில் விடப்படும் மீன் குஞ்சுகள் பன்மடங்கு பெருகி, பெரிய மீன்களாக வளர்ச்சியடைந்த பின்னர், இம்மீன்களை மீனவர்கள் பிடித்து, விற்பனை செய்யும்போது அவர்களுக்கு அதிக வருவாய் கிடைப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரமும் வாழ்க்கைத் தரமும் மேம்படும். மேலும், மக்களுக்கும் சுத்தமான, சுகாதாரமான நாட்டின மீன் ரகங்கள் எளிதில் கிடைக்கும் என்றார். இந்த வகையில் காவிரி மற்றும் அமராவதி அருகில் சுமார் 3 லட்சத்து 12 ஆயிரம் மீன் குஞ்சுகளை விடப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனவர்களுக்கு வாழ்வாதாரமும் பெருகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்