முகப்பு Uncategorized கரூரில் சிவா டெக்ஸ்டைல்சில் திடீர் ரெய்டு.

கரூரில் சிவா டெக்ஸ்டைல்சில் திடீர் ரெய்டு.

1
0

கரூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் (சிவா டெக்ஸ்டைல்ஸ்) சரவணன் என்பவருக்கு சொந்தமான தனியார் ஜவுளி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கியுள்ளனர்.

கரூர் சிவா டெக்ஸ்டைல்ஸுக்கு உட்பட்ட கரூர் நகரம், குளித்தலை மற்றும் சேலம், திருப்பூர், ஊட்டி உட்பட ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான கிளைகள், வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கரூர் நகரில் அமைந்துள்ள ஜவுளி நிறுவனத்தில் நான்கு வாகனங்களில் வந்த கோவையை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கரூர் நகரில் அமைந்துள்ள கடை, குடோன், வீடு மற்றும் குளித்தலையில் அமைந்துள்ள ஜவுளி கடை என, நான்கு இடங்களிலும் சேலம், திருப்பூர், ஊட்டி ஆகிய கிளைகள் உட்பட மொத்தம் ஏழு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்