நூல் விலையை குறைக்க வலியுறுத்தி கரூரில் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் 2நாள் வேலை நிறுத்த போராட்டம். பருத்தி நூல் விலையை குறைக்க வலியுறுத்தி மே16, 17 ஆகிய தேதிகளில் அடையாள வேலைநிறுத்தம். கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கிறார்கள்.

நூல் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்த நூலை சந்தைப்படுத்தாமல் இருப்பு வைத்து வருகின்றனர். இதனால் சந்தையில் தேவைக்கேற்ற நூல் கிடைப்பதில்லை. அதேசமயம் நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது.

இதனால் மானியத்தை நிறுத்தி, ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்.அப்போதுதான் சந்தைக்கு நூல் வரத்து சீராக இருக்கும்.அதன் மூலம் உற்பத்தியை இயல்பாக நடத்துவதற்கு வாய்ப்பாக இருக்கும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால், தற்போது உள்ள சூழலில் நாள்தோறும் நூல் விலை ஏறி வருவதால், ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கரூர் மாநகரில் ஜவுளி உற்பத்தி ஏற்றுமதி என 800 நிறுவனங்கள்,
150 நூல் வினியோகஸ்தர்கள், 50 டையிங் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள், 500க்கும் மேற்பட்ட சிறு தையல் நிறுவனங்கள்,ஜவுளி தொழில் சார்ந்த நிறுவனங்கள் உள்ளிட்டோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
சுமார் 2 1/2 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, சுமார் 100 கோடி அளவில் ஜவுளி உற்பத்தி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறிவருகின்றனர்.