முகப்பு Uncategorized கரூரில் ஜவுளி ஏற்றுமதியில் பணி புரியும் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் திடீரென தீப்பிடிப்பு.

கரூரில் ஜவுளி ஏற்றுமதியில் பணி புரியும் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் திடீரென தீப்பிடிப்பு.

1
0

கரூர் அருகே ஜவுளி ஏற்றுமதியில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஏற்றி வந்த வேன் திடீரென தீ பிடித்ததால், பத்திரமாக தொழிலாளர் இறக்கிவிடபட்டனர். ஆனால் வேன் முற்றிலும் எரிந்து நாசம்.

கரூர் அருகே உள்ள டெக்ஸ்டைல் பார்க்கில் தனியார் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து தொழிலாளர்களை வேனில் ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கரூர் மாவட்டம் லாலாபேட்டையில் இருந்து தனியார் நிறுவனத்தின் பணி புரியும் தொழிலாளர்களை, வேனில் ஏற்றிக்கொண்டு டெக்ஸ்டைல் பார்க் வந்து கொண்டிருந்த பொழுது சுக்காலியூர் அருகே வேன் மோட்டாரில் திடீரென தீ பிடித்து புகை கிளம்பியதால், ஓட்டுநர் மற்றும் பயணம் செய்த 15 பயணத்துக்கு மேற்பட்டோர் அலறி அடித்து இறங்கினர்.

பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்த கரூர் தீயணைப்பு துறையினர் தீப்பிடித்த வேனை அணைத்தனர். ஆனால் வேன் முற்றிலும் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளிக்கப்பட்டுள்ளது. ஜவுளி ஏற்றுமதியில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஏற்றி வந்த வேன் திடீரென தீ பிடித்ததால், பத்திரமாக தொழிலாளர் இறக்கிவிடபட்டனர். ஆனால் வேன் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்