
கரூரில் தூய்மை, மக்கள் உறுதிமொழி எடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பணியை தொடங்கினார்.
கரூர் மாநகராட்சி சார்பில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயகத்தின் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் உறுதி மொழி எடுத்து தூய்மை பணியினை தொடங்கி வைத்தார். கரூர் மாநகராட்சி சார்பில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பகுதியில் நகரங்களின் தூய்மைக்ககான மக்கள் இயக்கம் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் உறுதி மொழி எடுத்தல், தூய்மை பணிதொடங்கிவைத்தல், தான்தோன்றிமலை சுங்ககேட் பகுதியில் கல்லூரி மாணவ மாணவிகளின் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்நிகழ்ச்சிக்கு கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, வணக்கத்திற்குரிய கரூர் மாநகராட்சி மேயர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி 2022-2023 ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில், சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் (Cleanliness drive) நடத்த "நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் (People's Movement for Clean Cities)" தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் இந்தத் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தேசிய சமுதாய நலப்பணி மற்றும் தேசிய பசுமை படையை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் என் நகரம் என் பெருமை, என் நகரத்தைத் தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமையும், பொறுப்புமாகும்.பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பதே நகரத் தூய்மைக்கான முதற் காரணம் என்பதை நான் நம்புகிறேன்.தூய்மைப் பணிகளுக்கு என்னை அர்ப்பணித்துக் கொள்ள, நேரத்தை ஒதுக்குவேன். நான் பொது இடங்களில் குப்பை கொட்ட மாட்டேன். பிறரையும் குப்பைகொட்ட அனுமதிக்க மாட்டேன். குப்பையை வீட்டிலேயே பிரித்து தூய்மைப்பணியாளர்களிடம் ஒப்படைப்பேன். தூய்மை நகருக்கான என் முயற்சியில், நான் பங்கேற்பதுடன், என் குடும்பத்தாரையும், சுற்றத்தாரையும் முழு ஆர்வத்துடன் பங்கேற்க ஊக்குவிப்பேன்.என்னால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் என் நகரத்தைத் தூய்மையாக வைக்கப் பேருதவி செய்யும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். என அனைவரும் உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர். அதனை தொடந்து மாவட்ட ஆட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய கரூர் மாநகராட்சி மேயர், தூய்மைப் பணிளார்கள், தன்னார்வலர்கள், மற்றும் பொதுமக்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள வளாகத்தில் குப்பைகள், நெகிழி கழிவுகள், பாட்டில்கள், காகிதகப்புகள் உள்ளிட்ட பல்வேறுவகையான குப்பைகளை மக்கும் குப்பைகள் மக்கா குப்பைகள் என தரம்பிரித்து சேகரிக்கும் பணியினை மேற்கொண்டார்கள். பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இப்பணியில் 1200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன், துணை மேயர் சரவணன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முத்துசெல்வன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
