முகப்பு Uncategorized கரூரில் தேசிய இளைஞர் திருவிழா தினத்தை முன்னிட்டு மராத்தான் போட்டி.

கரூரில் தேசிய இளைஞர் திருவிழா தினத்தை முன்னிட்டு மராத்தான் போட்டி.

2
0

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக எச்.ஐ.வி/எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தேசிய/மாநில/மாவட்ட அளவில் “இளைஞர் திருவிழா 2023-24′” மூலம் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு மாரத்தான் ஒட்டம் , நடத்தப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகளிடையே மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய மராத்தான் ஓட்டத்தை ஆட்சியர் பிரபு சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

இந்த மாரத்தான் போட்டியானது 5 கிமீ தொலைவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி காளியப்பனூர், தாந்தோன்றிமலை, பாரதிதாசன் நகர் வழியாக சென்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பாராட்டு தெரிவித்து, சான்றிதழ்களை வழங்கினார்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்