முகப்பு Uncategorized கரூரில் பள்ளி சீருடை அணிந்து மாணவ மாணவிகள் போராட்டம்

கரூரில் பள்ளி சீருடை அணிந்து மாணவ மாணவிகள் போராட்டம்

7
0

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதிகளில் இருந்து சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வெள்ளியணையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். மேட்டுப்பட்டியில் இருந்து வெளியே தினமும் நீண்ட தூரம் தனியார் மினி பஸ்ஸில் கட்டணம் செலுத்தி மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், தற்போதைய இந்த பகுதி வழியாக சென்று வந்த தனியார் மினி பஸ்ஸும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு, இயக்கப்படவில்லையாம். இதனால் சுமார் 4 கிலோ மீட்டர் தூரமுள்ள பள்ளிக்கு புத்தகப் பைகளை தூக்கிக்கொண்டு நடந்து சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டதால், தற்போது, அப்பகுதி மாணவர்கள் தங்களுக்கு காலை, மாலை வேலைகளில் பள்ளிக்கு சென்று வர அரசு பஸ் வசதி வேண்டுமென கோரி, கடந்த இரண்டு நாட்களாக பள்ளி சீருடை அணிந்து பள்ளிக்குச் செல்வதை புறக்கணித்து வீட்டிலேயே இருந்தனர். வெள்ளியணை மேட்டுப்பட்டியில் பஸ் வசதி இல்லாததால் பள்ளிக்கு செல்வதை புறக்கணித்த மாணவர்களிடம் அதிகாரிகள் அளித்த உறுதியை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்