முகப்பு கரூர் கரூரில் பிளாஸ்டிக்கில் தயாரித்த துணிய மோடி போட்டாரா?

கரூரில் பிளாஸ்டிக்கில் தயாரித்த துணிய மோடி போட்டாரா?

4
0

பார்லிமென்ட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி செலுத்தும் தீர்மானத்தின் மீதான விவாதம் குறித்து இன்று லோக்சபாவில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, பிரதமர் மோடி நீல நிறத்திலான ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். இந்த ஜாக்கெட் வழக்கமான பருத்தி துணியால் செய்யப்பட்டது அல்ல, மாறாக மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் துணியால் தயாரிக்கப்பட்டது. அதோடு, இந்த உடை தமிழகத்தின் கரூர் அருகே உள்ள காக்காவடி பகுதியில் உள்ள ரெங்கா பாலிமர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பதுதான் குறிப்பிடத்தக்கதாகும்.

9 கலர்களில் இருந்து, பிரதமர் மோடிக்கு நீல நிற துணி தேர்வு செய்யப்பட்டது. இதன் பிறகு, அந்த துணி குஜராத்தில் இருக்கும் பிரதமர் மோடியின் தையல்காரருக்கு அனுப்பப்பட்டது. அவர் அந்த ஜாக்கெட்டை தயார் செய்தார். இத்தகைய ஜாக்கெட் ஒன்றைத் தயாரிக்க சுமார் 15 பெட் பாட்டில்கள் தேவைப்படுகிறது. அதேசமயம், முழு ஆடையைத் தயாரிக்க சுமார் 28 பெட் பாட்டில்கள் தேவைப்படுகிறது. இந்த ஜாக்கெட்டின் சந்தை விலை வெறும் 2,000 ரூபாய் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் ஸ்ரீரெங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்