முகப்பு Uncategorized கரூரில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் குளித்தலை கோட்டில் சரணடைந்தார்.

கரூரில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் குளித்தலை கோட்டில் சரணடைந்தார்.

1
0

கரூரில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் குளித்தலை கோட்டில் சரணடைந்தார். கரூரில், நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் மனைவியை கத்தியால் கொலை செய்துவிட்டு, குளித்தலை கோர்ட்டில் சரண் அடைந்தார். கரூர் மாநகராட்சி  தான்தோன்றி மலை என் ஜி ஓ காலனி சேர்ந்தவர் செல்வராஜ்’. இவரது மனைவி சத்யா’. இருவரும் கட்டட தொழிலாளி’. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால், அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சத்யாவிடம் கணவர் செல்வராஜ் மீண்டும் சண்டையிட்டு உள்ளார். அப்போது, கத்தியை எடுத்து சத்தியாவின் வயிற்றில் குத்தியதில் சத்யா ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

அங்கிருந்து செல்வராஜ் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் தலைவர் மூத்த மகனிடம் சத்யாவை கத்தியால் குத்தி விட்டதாகவும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படியும் கூறிவிட்டு தப்பினார். அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சத்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த தான்தோன்றி மலை போலீசார் வழக்கு பதிந்து செல்வராஜை தேடி வந்தனர். குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றம் குற்றவியல் நடுவர் எண் இரண்டில் நீதிபதி பிரகதீஸ்வரன் முன்னிலையில் செல்வராஜ் சரணடைந்தார். நீதிபதி பிரகதீஸ்வரன் செல்வராஜை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்