கரூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழை நீர் புகுந்ததால் பள்ளி மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தாந்தோணிமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அதிக அளவு மழை நீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டதோடு, 3 மணிக்கு மேல் பள்ளி மாணவர்கள் அவசர அவசரமாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கரூரில் பெய்த கனமழை காரணமாக அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கிய மழை நீரில் அட்டை, பூச்சிகள் வெளியேறும் அச்சத்தால் மாணவ மாணவிகளுக்கு மதியத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டது.
கரூரில் கடந்த மூன்று நாட்களாக பகல் நேரங்களில் லேசான சாரல் மழையும், இரவு நேரத்தில் கனமழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.