முகப்பு துயர் செய்திகள் கரூரில் மாடு முட்டி உயிரிழந்த வீரனின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் நிதி உதவி.

கரூரில் மாடு முட்டி உயிரிழந்த வீரனின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் நிதி உதவி.

22
0

தமிழகம் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா தோகைமலை ஆர்.டி.மலை ஊராட்சியில் நேற்று முன்தினம் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் தோகைமலை ஒன்றியம் வடசேரி ஊராட்சி, பள்ளப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் சிவக்குமார் வயது 23 என்ற மாடுபிடி வீரர் மாடு முட்டி வலது கண் கருவிழி வெளியே வந்து பலத்த காயமடைந்த நிலையில் திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் ஆறுதலை தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டேன் என்று கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்