முகப்பு Uncategorized கரூரில் மாவட்ட ஆட்சியர் ஒலிம்பிக் சுடரை ஏற்றி போட்டியினை தொடங்கி வைத்தார்.

கரூரில் மாவட்ட ஆட்சியர் ஒலிம்பிக் சுடரை ஏற்றி போட்டியினை தொடங்கி வைத்தார்.

4
0

கரூரில் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டியினை, தேசிய கொடி மற்றும் ஒலிம்பிக் சுடரை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் ஏற்றி, விளையாட்டு போட்டியினை தொடங்கி வைத்தார்.

கரூர் மாவட்டம் புலியூர் டாக்டர் எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் கரூர் வருவாய் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டியினை, தேசியக்கொடி மற்றும் ஒலிம்பிக் சுடரை மாவட்ட ஆட்சி தலைவர் பிரபு சங்கர் ஏற்றி வைத்து, தடகள விளையாட்டு போட்டியினை தொடங்கி வைத்தார். கரூர் மாநகராட்சி மேயர் திருமதி கவிதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் அவர் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை குறுவட்ட அளவிலான போட்டிகளில் 14 வயது, 17 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் முதல், இரண்டு இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்