முகப்பு Uncategorized கரூரில், மீண்டும் வருமான வரித்துறை சோதனையா?

கரூரில், மீண்டும் வருமான வரித்துறை சோதனையா?

67
0

கரூரில், கடந்த மேமாதம் 26- தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர்,நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு அலுவலகங்களில் தொடர்ந்து 8 நாட்கள் சுமார் 25-க்கு மேற்பட்ட இடங்களில்சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜி நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடங்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் குறிவைத்து சோதனை தொடங்கியுள்ளார்.

இன்று நடைபெறும் சோதனையானது, ராயனூர் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் கொங்கு மணி என்கிற சுப்பிரமணி வீடு,300 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருவதாக கூறப்படும்,

சர்ச்சைக்குரிய வீட்டின் இடத்தில் முன்னாள் உரிமையாளர் என்று கூறப்படும் சின்னாண்டான் கோவில் பகுதியில் உள்ள ராம விலாஸ் நூற்பாலை உரிமையாளர் ரமேஷ் பாபு அலுவலகம், கரூர்-கோவை சாலையில் உள்ள கார்த்திக் என்பவரின் உரிமையாளரின் சக்தி மெஸ் உனவகம், மேலும் 2 நிதி நிறுவனம் என 5 இடங்களில் தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு அதிகாரிகளால் சோதனை நடைபெற்று வருகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்