கரூர் அருகே அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஹெலிகாப்டர் மூலம் டன் கணக்கில் பூக்கள் மழை தூவப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.கோபுர கலசத்திற்கு மாலை அணிவித்து சந்தனம், குங்குமம் பொட்டிட்டு தீபம் காண்பிக்கப்பட்டது. அப்போது பொதுமக்களுக்கு மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து மூலவர் புது வாங்கலம்மனுக்கு புனித தீர்த்தம் ஊற்றப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் கரூர் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் டன் கணக்கில் பூக்கள் மழை தூவப்பட்டது.கும்பாபிஷே விழாவில் சுமார் 40,000 பொதுமக்கள் வருகை இருந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.