முகப்பு Uncategorized கரூரில் முருங்கைக்கீரையில் ஐஸ்கிரீம் மற்றும் மருந்து மாத்திரைகளா!!

கரூரில் முருங்கைக்கீரையில் ஐஸ்கிரீம் மற்றும் மருந்து மாத்திரைகளா!!

1
0

கரூர் மாவட்டம் பிரேம் மஹாலில் சர்வதேச முருங்கை கண்காட்சி 2ஆம் நாளான இன்று(05.11.2022) ஏராளமான பொதுமக்கள், விவசாய பெருமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டார்கள். கரூர் மாவட்டத்தில் நடைபெறும் சர்வதேச முருங்கை கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் 04.11.2022 நேற்றைய தினம் தொடங்கி வைத்தார்கள். அதனையொட்டி 2 ஆம் நாளான இன்று ஏராளமான பொதுமக்கள், விவசாய பெருமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு முருங்கையின் பயன்பாடுகள் செயல்படுத்தும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்கள். இந்நிகழ்ச்சிகளை இந்திய தொழில் கூட்ட்மைப்பு தலைவர் வெங்கடேஷன், துணை தலைவர்கள் செந்தில்சங்கர் ஏற்பாடுகளை செய்தார்கள்.

முருங்கை ஐஸ்கிரீம், முருங்கை பீடா, முருங்கை மருந்து, முருங்கை மாத்திரை, முருங்கை பொடி, முருங்கை கிரீம், முருங்கை டீ, முருங்கை நூடுல்ஸ், முருங்கை சிப்ஸ், முருங்கை தேன், முருங்கை எண்ணெய், முருங்கை இலை இட்லி பொடி, முருங்கை உருண்டை, முருங்கை விதை, முருங்கை இலை உரம், முருங்கை இலை மாவு, முருங்கை இலை செடிகள், விவசாயிகள் பயன்படுத்துவதற்கு தேவையான அனைத்து வகையான பொருட்கள் அந்த கண்காட்சியில் இடம் பெற்றன. முருங்கையில் இத்தனை வகைகளா என்று மக்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர். முருங்கைக்கீரை ஐஸ்கிரீம், சில்லி ஐஸ்கிரீம், பப்பாயா ஐஸ்கிரீம் என ஐஸ்கிரீம் வகையில் பல வகையான ஐஸ்கிரீம் அங்கு கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த பொதுமக்களும் அதனை ருசித்து வீட்டிற்கு வாங்கி சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்