கரூரில் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அருகே, தள்ளுவண்டியில் அகல் விளக்கு விற்பனை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பக்தர்கள் தங்களது இல்லத்திலும் ஆலயத்திலும் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்த இருப்பதால், இன்று முதல் விளக்கு வியாபாரம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விளக்கு ஒன்று ரூபாய் முதல் மூன்று வரை விற்பனையாகி வருகிறது. கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு வீடுகளில் தீபம் ஏற்றுக் கொண்டாடுவது வழக்கம். கரூர் மாநகரில் மண்ணால் செய்யப்பட்ட விளக்குகளை பொதுமக்கள் கார்த்திகை தீபத்திருநாளை கொண்டாட வாங்கிச் சென்றனர்.