கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடசேரி ஊராட்சி பள்ளப்பட்டியில் மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுதிறன்துறை அமைச்சர் கணேசன், ஆர்.டி.மலை ஊராட்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் விழாவில் மாடு முட்டி உயிரிழந்த சிவக்குமார் இல்லத்திற்கு நேரடியாக சென்று அவரது வாரிசு தாரருமான பழனிச்சாமி, அவரது மனைவி அஞ்சலை அவர்களிடம் ரூபாய் 3 லட்சத்திற்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார்கள். அவர்கள் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.