முகப்பு Uncategorized கரூரில் வேப்பம்பழம் பறிக்கச் சென்ற மூதாட்டிக்கு நடந்த சம்பவம்..!!

கரூரில் வேப்பம்பழம் பறிக்கச் சென்ற மூதாட்டிக்கு நடந்த சம்பவம்..!!

1
0

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த பள்ளி கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (65). இவரது கணவர் முத்துச்சாமி (Late). கன்னியம்மாள் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள காட்டுக்குள் வேப்பம்பழம் பறிக்க சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் தேடிச் சென்றனர்.

அப்போது காட்டுக்குள் உள்ள ஒரு வேப்பமரத்தின் அடியில் கழுத்து அறுபட்ட நிலையில், மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். சம்பவம் குறித்து சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கன்னியம்மாள் தங்கச் சங்கிலி ஒன்று அணிந்து இருந்ததாகவும், கழுத்து அறுபட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதால், தங்கச் சங்கிலியை பறிக்க வந்த போது ஏற்பட்ட போராட்டத்தில் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர் ஒருவரா? அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்