கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சொட்டல் தெருவை சேர்ந்தவர் முகமது தவ்பிக் அலி. இவர் கரூர் மாநகரில் ஸ்டேஷனரி மற்றும் கிப்ட் பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். இவரது உறவினர் முகமது ஷேக் என்பவர் மும்பையில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.

அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் முகமது தவ்பிக் அலி பராமரிப்பில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் இருசக்கர வாகனம் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வீட்டு வாசல் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனத்தை சுமார் 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர்கள் இரண்டு பேர் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் டூப்ளிகேட் சாவி போட்டு திருடி சென்றனர்.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.