முகப்பு Uncategorized கரூர் ஆயுதப்படை வளாகத்தில் இரண்டாம் நிலை காவலர் பயிற்சி நிறைவு அணிவகுப்பு.

கரூர் ஆயுதப்படை வளாகத்தில் இரண்டாம் நிலை காவலர் பயிற்சி நிறைவு அணிவகுப்பு.

1
0

விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு.

தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் முன்னிலையிலும், காலணி அணிந்தும், வெடிக்க வேண்டும் என தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு. பட்டாசுகளை மைதானங்கள் மற்றும் சமதளத்தில் வைத்தும், நீண்ட வத்திக்குச்சிகளை கொண்டும் பற்றவைக்க வேண்டும். குடிசைப்பகுதி மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பகுதிகளான பெட்ரோல் பங்க், வைக்கோல் போர் போன்ற இடங்களில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. நைலான், பட்டு துணிகளை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முதல், சம்பந்தப்பட்ட அனைத்து துறையினர்களும், பொதுமக்களும் தீபாவளி பண்டிகை குறித்தும், பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் கரூர் தீயணைப்பு துறையினர் சார்பில், கரூர் தாலுகா அலுவலகம் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பொதுமக்களை சந்தித்து விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகளையும் சந்தித்து தீபாவளியை பாதுகாப்போடு கொண்டாடுவதுதோடு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்திய வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.


கரூர் ஆயுதப்படை வளாகத்தில் இரண்டாம் நிலை காவலர் பயிற்சி நிறைவு அணிவகுப்பு.

தமிழகம் முழுவதும் காவல்துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, இரண்டாம் நிலை காவலர்கள் அடிப்படையில் பயிற்சி பெற்று வந்தனர். இதில் கரூர் மாவட்டத்தில், கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் கரூர் ஆயுதப்படை வளாகத்தில் 97 காவலர்கள் பயிற்சி பெற்று வந்தனர். கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை பயிற்சி கால நிறைவு விழாவில், சாகச நிகழ்ச்சிகள் பலவற்றை காவலர்கள் நிகழ்த்தினார்கள். அதை கண்டு பொதுமக்கள் மிகவும் ஆச்சரியப்பட்டனர்.


பயிற்சி காவலர்களுக்கான நிறைவு விழா.

ஒழுக்கமும் நேர்மையும் காவலர்களின் இரு கண்களாக இருக்க வேண்டும் டி.ஐ.ஜி அறிவுறுத்தல். பயிற்சி காவலர்களுக்கான நிறைவு விழாவில் ஒழுக்கமும் நேர்மையும் காவலர்களின் இரு கண்களாக இருக்க வேண்டும் என டி.ஐ.ஜி அறிவுறுத்தினார். தமிழக முழுவதும், தமிழக காவல்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்கள் பயிற்சி பெற்று வந்தனர். இதில் கரூர் மாவட்டத்தில், 97 காவலர்கள் பயிற்சி காவலராக கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி முதல் கரூர் ஆயுதப்படை வளாகத்தில் பயிற்சி செய்து வந்தனர். இந்த காவலர்களின் பயிற்சி முடிந்ததை ஒட்டி, காவலர்களின் நிறைவு அணிவகுப்பு விழா கரூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும், கரூர் காவலர் பயிற்சி பள்ளி முதல்வருமான சுந்தரவனம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளரான திருச்சி சரகடி ஐ.ஜி சரவண சுந்தர் கலந்து கொண்டு பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் பின்னர் திருச்சி சரக டி.ஐ.ஜி காவலர் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட பயிற்சி காவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது, தமிழ்நாடு காவல்துறையில் காவலர்களாக பணியில் சேர்ந்துள்ள நீங்கள், காவல்துறையின் மாண்பையும், பெருமையையும் போற்றி பாதுகாக்கும் வகையில், உங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். ” கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” ஆகிய மூன்றையும் பணியிலும், நடத்தையிலையும் கடைபிடிக்க வேண்டும். ஒழுக்கமும், நேர்மையும் காவலர்களின் இரு கண்களாக இருக்க வேண்டும். பொது இடங்களில் பணிபுரியும்போது கண்ணியத்தையும் மற்றும் பணியில் நேர்மையும் கடைபிடிக்க வேண்டும். இளம் வயதில் காவலர்களாக பணியில் சேர்ந்துள்ள நீங்கள், எந்தவிதமான கவன சிதறல்களுக்கும் ஆட்படாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். சட்டங்களை மதித்து மற்றவர்களுக்கு, முன் உதாரணமாக இருக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர் போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்