கரூரைச் சேர்ந்த சிவா டெக்ஸ்டைல்ஸ் ஜவுளி நிறுவனம் மற்றும் இவர்களுக்கு சொந்தமான கிளைகள், வீடு, அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் கோவையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சோதனை. தீபாவளி பண்டிகையின் ஜவுளி விற்பனையில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி கரூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் (சிவா டெக்ஸ்டைல்ஸ்) சரவணன் என்பவருக்கு சொந்தமான ஜவுளி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் நகரம், குளித்தலை உட்பட்ட ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கரூர் நகரில் அமைந்துள்ள ஜவுளி நிறுவனத்தில் நான்கு வாகனங்களில் வந்த கோவையை சேர்ந்த 15 -க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் நகரில் அமைந்துள்ள கடை, குடோன், வீடு மற்றும் குளித்தலையில் அமைந்துள்ள ஜவுளி கடை என நான்கு இடங்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சோதனை நடைபெற்று வருவதாக கரூரில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.