நெருங்கும் தீபாவளி பண்டிகை ஒட்டி, இனிப்பு கார வகைகள் விற்பனை அமோகம்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரே நாளே உள்ள நிலையில், கரூரில் இனிப்பு, கார வகைகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் செயல்பட்டு வருகின்றன. விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட விசேஷ தினங்களுக்கு முன்கூட்டியே இனிப்பு, கார வகைகளை தயாரிக்கும் பணிகளை தொடங்கி விடுவர். நடப்பு ஆண்டும், தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், கரூரில் இனிப்பு, காரம் விற்பனை சூடு பிடித்துள்ளது.
இது குறித்து கரூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர் சங்கம் செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது, கார, இனிப்பு வகைகள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் அரிசி மாவு, கடலை மாவு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், நெய், சர்க்கரை உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை நடப்பாண்டில் வெகுவாக உயர்ந்துள்ளது. காசு சிலிண்டர் விலை, தொழிலாளர்களுக்கான சம்பளம் போன்றதும் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது. பலகார தயாரிப்புக்கான செலவு அதிகரித்துள்ளதால், அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு கிலோ 460 இனிப்புகள் விற்பனையான நிலையில், தற்போது 520 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே போலவே, கிலோ 300 ரூபாய்க்கு விற்பனையான பல்வேறு கார வகைகள் தற்போது 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நுகர்வோர் பெரிய அளவில் பாதிக்கப்படாத வகையிலேயே விலையை உயர்த்தி உள்ளோம். தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தற்போது இனிப்பு, கார வகைகளை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் இவற்றின் தயாரிப்பு பணியும் தீவிரமாக நடந்து வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.