முகப்பு Uncategorized கரூர், ஜவஹர் பஜாரில் சென்டர் மீடியன் சேதம்.

கரூர், ஜவஹர் பஜாரில் சென்டர் மீடியன் சேதம்.

2
0

கரூர் ஜவகர் பஜாரில் சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியன் பல இடங்களில் உடைந்து சேதமடைந்துள்ளது. கரூர் நகரின் மையப்பகுதியாக உள்ள ஜவகர் பஜாரில் தலைமை தபால் நிலையம், தாலுகா அலுவலகம், கிளை சிறை, தீயணைப்பு நிலையம், ஜவுளி நிறுவனங்கள், ஜுவல்லரிகள் உள்ளன. இதனால், ஜவகர் பஜாரில் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், விபத்துகளை தவிர்க்கவும், ஜவஹர் பஜாரில் சாலையின் நடுவில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. தற்போது, இந்த சென்டர் மீடியன் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. ஆனால், இதனை சீரமைக்காமல் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் காலம் கடத்துகின்றனர். முழுமையாக சேதம் அடைந்தால் வாகனங்கள் தாறுமாறாக செல்லும். மேலும் விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக சென்ட ர் மிடியனை சீரமைக்க வேண்டியது அவசியம்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்