அரவக்குறிச்சி மற்றும் கரூர் பகுதியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறி விலை விண்ணை தொடும் அளவிற்கு போய்க்கொண்டிருக்கிறது. கிலோ 20 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம் விலை, இப்போது ஆறு மடங்காக அதிகரித்து கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையாகின்றன. தீபாவளி பண்டிகை சமயத்தில் வெங்காய விலை திடீர் திடீரென்று உயர்வதால், நடுத்தர வர்க்கத்து இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைகின்றனர். அன்றாடம் ஏற்படும் கூடுதல் செலவுகளை சமாளிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கரூர் அரவக்குறிச்சி பள்ளப்பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இது மட்டும் இல்லாமல் சிறிய சரக்கு வாகனங்களிலும் வைத்து சின்ன வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வியாபாரம் செய்கின்றனர்.
இவர்கள் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கரூர் உள்ளிட்ட இடங்களில் காய்கறி மொத்த மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்து சில்லறையில் விற்பனை செய்யப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த வாரங்களில் கிலோ இருவது ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம் இப்போது ஐந்து மடங்கு விலை அதிகரித்து கிலோ 100 ரூபாய், 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால், தற்போது தீபாவளி வர 1 நாட்கள் இருக்க, சின்ன வெங்காயம் விலை ஆறு மடங்கு அதிகரித்து கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போல, இருபதுக்கு ரூபாய்க்கு விற்பனையான தக்காளி விலை அதிகரித்து இப்போது 50 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. இதனால் நடுத்தர வர்க்க இல்ல தரிசிகள் இதனால் ஏற்படும் கூடுதல் செலவுகளை தீபாவளி பண்டிகை நேரத்தில் சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இப்போது மழை அதிகமாக வருவதால் தக்காளி, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை அதிகமாக அதிகமாக வீட்டு இல்லத்தரசிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கூட்டுறவு சங்கத்தில் வெங்காயம் விற்பனை கடந்த சில நாட்களாக அதிகரிப்பதால், இல்லத்தரசர்களின் சிரமத்தை புரிந்து கொண்டு, பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சின்ன வெங்காயம் வரத்து குறைந்ததை தொடர்ந்து, சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 90 முதல் 100 வரை விற்கப்படுகிறது. இதனால் வெளிமார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்து வந்ததை தொடர்ந்து, கூட்டுறவு சங்கங்களின் மூலமாக சின்ன வெங்காயம் கொள்முதல் செய்து, நியாய விலை கடை மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கரூர் மண்டல இணைப்பதிவாளர் ப.சுந்தர ராஜா அறிவுறுத்தியதன் பேரில், கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலமாக சின்ன வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, கரூர் நகரப் பகுதி, வெங்கமேடு, பசுபதிபாளையம், அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகளின் மூலம் கிலோ 62 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் வந்து வெங்காயம் வாங்கி இல்லத்தரசிகள் மகிழ்ச்சியுடன் பெற்று செல்கின்றனர்.