கரூர் மட வளாகம் தெருவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக கடைகள் அமைப்பு.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கரூர் மட வளாகத்தில் தற்காலிக கடைகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அக்டோபர் 24ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக வழக்கம் போல கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் தான் அனைத்து தரைக்கடைகளும் செயல்பட்டு வந்தன. கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு, தற்காலிக கடைகள் அனைத்தும் திருவள்ளுவர் மைதானத்தில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த முறை தற்காலிக கடைகள் அனைத்தும் மடவளாகம் தேர்வு பகுதியில் செயல்பட்டு வரும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக கடைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இருபதாம் தேதியுடன் முடிக்கப்பட்டு வரும் நிலையில், 21ஆம் தேதி முதல் அனைத்து கடைகளும் செயல்படும் வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தரை கடைக்கு சுங்க கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கரூர் நகரில் தற்காலிக தரைக்கடை அமைத்துள்ளவர்களிடம் சுங்க கட்டணம் வசூல் செய்தால் அது குறித்து தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம் என கரூர் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் ஜவகர் பஜார், பசுபதிசுவரர் கோவில், எம்.எல்.ஏ அலுவலக சாலை, கோவை சாலை, திண்ணப்ப கார்னர் சாலைகளில் உள்ள ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. மேலும், ஆங்காங்கே தற்காலிகமாக தரைக் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில் ஜவுளி வகைகள், காலணிகள், அலங்காரப் பொருட்கள், கவரிங் நகைகள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த தற்காலிக கடைகளில் சிலர் சுங்க கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தீபாவளியை முன்னிட்டு, கரூர் மாநகராட்சி பகுதிகளில் பலர் தரைக்கடை அமைத்துள்ளனர். இதற்கு மாநகராட்சி சார்பில் தரைக்கடை சுங்கவசூல் மற்றும் வாகன நிறுத்த கட்டணம் வசூல் செய்யப்படவில்லை. எனவே, வெளி நபர்கள் யாரும் எந்த கட்டணம் கேட்டாலும் கொடுக்க வேண்டாம். அத்துமீறி வசூலில் ஈடுபடும் நபர்கள் குறித்து 0432426001 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் துணிக்கடைகள் அமைக்கப்பட்டு அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. கரூர் – திருச்சி, கரூர் – புதுக்கோட்டை, கரூர் – ராமநாதபுரம், கரூர் – காரைக்குடி, கரூர் – மதுரை, கரூர் – தஞ்சாவூர், கரூர் – கும்பகோணம், கரூர் – மன்னார்குடி, கரூர் – காரைக்கால், கரூர் – சேலம், கரூர் – சென்னை, கரூர் – கும்பகோணம், கரூர் – ஈரோடு இன்னும் சில மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம், பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமமும் இல்லாமல் பயணம் செய்ய வேண்டி, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. எந்தவித இடையூறும் இல்லாமல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரூரில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊர்களுக்கும் பேருந்துகளை இயக்க கும்பகோணம் போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து நகரங்களுக்கும் 23ஆம் தேதி வரையிலும் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்து, அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப, இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை கரூரில் இருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊருக்கு செல்ல, வரும் 24ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை அனைத்து நாட்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அலுவலகம் செல்லும் அலுவலர்கள் செல்லவும், பள்ளி மாணவ, மாணவிகள் கல்லூரி மாணவ, மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லவும், பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சிறப்பு பேருந்துகள் அதிகமாக இயக்கப்பட உள்ளன.