முகப்பு Uncategorized கரூர், நாடக நடிகர் சங்கம் (பதிவு புதுப்பித்தல்) செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம்...

கரூர், நாடக நடிகர் சங்கம் (பதிவு புதுப்பித்தல்) செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.

41
0

கரூர் மாவட்டத்தில், 300-க்கும் மேற்பட்ட நாடக நடிகர்கள், கலை, பண்பாடு துறையில் நாட்டுப்புற கலைஞர்களுக்காக பதிவு பெற்று உள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு உறுப்பினர் சேர்க்கையின் போது தற்காலிக உறுப்பினராக சேர்ந்த பழனிச்சாமி என்பவர் 2012 ஆம் ஆண்டில் அண்ணாதுரை என்பவர் தலைமையில் உள்ள சங்க நிர்வாகம் ஊழல் செய்து விட்டதாக கரூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் பொய் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனால், சங்கம் செயல்படாமல் தடைபட்டுவிட்டது. மேலும், இந்த பழனிச்சாமி சங்கத்தை மறு பதிவு செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சங்கத்தில் 13 பேர் மட்டுமே உள்ளனர்.

இந்த 13 நபர்களால் மற்ற 100க்கணக்கான உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றோம். இவர்களுக்கும் எங்கள் சங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

எனவே நலிவடைந்துள்ள நாடக நடிகர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் சங்கத்தை மறு பதிவு செய்து கொடுக்க ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்