முகப்பு Uncategorized கரூர், பழைய ஜெயங்கொண்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் – போராட்டம்.

கரூர், பழைய ஜெயங்கொண்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் – போராட்டம்.

1
0

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

இங்கு மது வாங்க வருபவர்கள் அருகில் உள்ள பேரூராட்சி திருமண மண்டபத்திலும், விளை நிலங்களிலும் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி விட்டுச் செல்வதாகவும் மேலும், பகல் இரவு நேரங்களில் பெண்கள் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் கூறி டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கடந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.

பேச்சுவார்த்தை நடத்திய அரசு அதிகாரிகள் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாகவும் அதில் இந்த கடையும் உள்ளதாகவும் கூறி இருந்தனர்.

தமிழக அரசு வெளியிட்ட மூடப்படுவதாக கூறிய 500 டாஸ்மார்க் கடைகளில் பழைய ஜெயங்கொண்டம் டாஸ்மாக் கடை பெயர் இடம் பெறவில்லை.அப்போது, டாஸ்மாக் கடையினை பூட்டு பூட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, டாஸ்மாக் உதவி மேலாளர் மதிவாணன் கூறுகையில் தற்போது இங்கு, செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை இனி விற்பனைக்காக திறக்கப்படாது எனவும், கடையில் உள்ள மது பாட்டில்களை சில நாட்களுக்குள் கடையை திறந்து எடுத்துக் கொள்வதாகவும் உறுதி அளித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்