முகப்பு Uncategorized கரூர் பெரிய  ஆண்டாங்கோயில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து சரிவு.

கரூர் பெரிய  ஆண்டாங்கோயில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து சரிவு.

1
0

கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோயில் தடுப்பணைக்கு, தண்ணீர் வரத்து வினாடிக்கு, 243 கன அடியாக குறைந்தது. இதனால், பொதுமக்கள் தடுப்பணையில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 873 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 850 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது.

இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோயில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 243 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. இதனால், அணைப்பகுதிகளில் பொதுமக்கள் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 15 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட, அணை நீர்மட்டம், 88.09 அடியாக இருந்தது.

கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 11 ஆயிரத்து, 405 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு ,21 ஆயிரத்து, 554 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குறுவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 20 ஆயிரத்து, 334 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வடக்காடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.59 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.33 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்