முகப்பு Uncategorized கரூர் மண்டலத்தில் டவுன் பஸ்கள் (பிங்க்) நிறத்தில் மாற்றம்.

கரூர் மண்டலத்தில் டவுன் பஸ்கள் (பிங்க்) நிறத்தில் மாற்றம்.

12
0

கரூர் மண்டலத்தில் மகளிருக்கு கட்டணமில்லா பஸ்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், இளஞ்சிவப்பு பிங்க் வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கரூர் மன்றத்தில், கரூர் 1, கரூர் 2, அரவக்குறிச்சி குளித்தலை என 4 பணிமனைகள் உள்ளன. இவற்றில் 90 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பெண்கள் கட்டணம் என்று பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பயணரின் எண்ணிக்கை 62 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இலவச பயணம் அனுபவிக்கப்பட்டுள்ள டவுன் பஸ்களை பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், டவுன் பஸ்களுக்கு இளஞ்சிவப்பு (பிங்க்) நிறம் பூச முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உட்பட பல்வேறு மாநகரங்களில் டவுன் பஸ்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் மாற்றப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன. கரூர் மண்டலத்தில் கரூர் -சேங்கல், கரூர்- வேலூர் ஆகிய வழித்தடங்களில் இயங்கும் இரண்டு பஸ்களுக்கு இளஞ்சிவப்பு நிறம் பூசப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது,

பெண்கள், மாற்று திறனாளிகள், திருநங்கையர் எளிதில் அடையாளம் காணும் வகையிலும், கட்டணம் இல்லா பயணச் சலுகை பஸ்களையும், தனிநிறம் பூச முடிவு செய்தோம். அதன்படி பஸ்ஸின் முன் மற்றும் பின் பகுதியில் இளஞ்சிவப்பு நிறம் பூசும் பணிகள் நடக்கிறது. மாதிரிக்காக இரண்டு பஸ்களில் வண்ணம் பூசப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. பின் படிப்படியாக மற்ற அனைத்து பஸ்களிலும் இளஞ்சிவப்பு நிறம் பூசப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்